மலையாள நடிகர் ஷேன் நிகாம் தமிழில் அறிமுகமாகும் ‘மெடராஸ் காரன்’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

vinoth
வெள்ளி, 7 ஜூன் 2024 (07:57 IST)
பிரபல மலையாள நடிகர் ஷேன் நிகம்,  இஷக், கும்பளங்கி ஆகிய மலையாள படங்களில் நடித்து புகழ்பெற்றவர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வெளியான ஆர் டி எக்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

இந்நிலையில் இப்போது ஷேன் நிகம் நேரடி தமிழ்ப் படத்தில் நடிக்கிறார். மெட்ராஸ்காரன் என்ற பெயரில் உருவாகும் இந்த படத்தில் அவர் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை இயக்குனர் வாலி மோகன் தாஸ் இயக்குகிறார். படத்தில் மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் கலையரசன் நடிக்கிறார். கதாநாயகியாக நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகளான நிஹாரிகா நடிக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில் இப்போது படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது சம்மந்தமாக வீடியோ ப்ரோமோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்