விஜய் ஆண்டனி நடிக்க இருந்த கதையில் விஜய் சேதுபதி..!

vinoth

திங்கள், 3 ஜூன் 2024 (07:54 IST)
விதார்த், பாரதிராஜா ஆகியோர் நடிப்பில் உருவான குரங்கு பொம்மை படத்தை இயக்கியவர் நித்திலன். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அடுத்து அவர் விஜய் சேதுபதி நடிக்கும் மகாராஜா இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு மத்தியில் தொடங்கி இறுதியில் முடிவடைந்தது. இது விஜய் சேதுபதியின் 50 ஆவது படமாக உருவாகி வருகிறது.

இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ் நட்டி மற்றும் பாய்ஸ் மணிகண்டன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.  படத்துக்கு ஆகானாஷ் லோக்நாத் இசையமைக்கிறார். இந்த படம் ஒரு ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது. ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் முடிந்தாலும் இந்த படம் ரிலீஸாகாமல் முடங்கிக் கிடந்தது. இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமை விற்பனை ஆகாமல் இருப்பதே ரிலீஸ் தாமதத்துக்குக் காரணம் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் ஜூன் 13 ஆம் தேதி அந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வேலைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் ரிலீஸான படத்தின் டிரைலர் பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் சேதுபதிக்கு ஒரு ஹிட் படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த படம் பற்றி பேசியுள்ள தயாரிப்பாளர் தனஞ்செயன், “இந்த கதையை முதலில் நான் தயாரிக்க, விஜய் ஆண்டனி நடிப்பதாக இருந்தது. ஆனால் நித்திலன் ஏற்கனவே பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்திடன் முன்பணம் வாங்கிவிட்டதால் அவர் தடையில்லாச் சான்றிதழ் தர மறுத்தனர். அதனால்தான் எனனால் இந்த படத்தைத் தயாரிக்க முடியவில்லை” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்