ஏன் ஹீரோவாக நடிப்பதில்லை என்ற கேள்விக்கு தன் ஸ்டைலில் நக்கலாக பதில் சொன்ன சத்யராஜ்!

vinoth

செவ்வாய், 4 ஜூன் 2024 (15:05 IST)
தமிழ் சினிமாவில் 90 களில் முன்னனிக் கதாநாயகனாக இருந்தவர்களில் ஒருவர் சத்யராஜ். தனக்கென்று ஒரு ஸ்டைலை உருவாக்கி அதில் வெற்றிப் படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தார். அனால் 2000 களுக்குப் பிறகு அவரின் மார்க்கெட் சரிய ஆரம்பித்தது.

அதனால் குணச்சித்திரம் மற்றும் வில்லன் வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். இப்போது பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இந்நிலையில் ஏன் இப்போது நீங்கள் ஹீரோவாக நடிக்கவிலை என்ற கேள்விக்கு தன் ஸ்டைலில் அவர் நக்கலாக பதிலளித்துள்ளார்.

அதில் “என்ன காரணமென்றால் எனக்கு மார்க்கெட் இல்லை. ஒரு 5 வருடங்களாகவே என் படங்கள் ஓடவில்லை. இடையில் அஜித், விஜய், சூர்யா எல்லாம் வந்துவிட்டார்கள். அவர்களோடு எனக்கு தம் கட்ட முடியவில்லை. அதுமட்டுமில்லாமல் குணச்சித்திர வேடத்தில் நடிக்க ஹீரோவுக்கு இணையான சம்பளம் என்பதால் அதில் நடிக்க கசக்குமா?’ என ஜாலியாக பதிலளித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்