விஜய், அஜித்தின் இந்த விளம்பரங்களை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் வீடியோ!

வியாழன், 20 ஏப்ரல் 2023 (18:56 IST)
தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள நடிகர்களில் முக்கியமானவர்கள் விஜய் மற்றும் அஜித். இருவரும் தனித்தனியே நடித்து வரும் நிலையில் இருதரப்பு ரசிகர்களுக்கும் அடிக்கடி தங்கள் விருப்ப நாயகர்கள் குறித்து சமூக வலைதளங்களில் மோதல்களும் நடந்து வருவது வாடிக்கையாக உள்ளது.
 
இந்நிலையில்,  கடந்த சில நாட்களாக அஜித், விஜய் நடித்த பழைய விளம்பர வீடியோக்கள்  ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்தவகையில் தற்போது விஜய் Tata Docomo விளம்பரத்தில் டபுள் ஆக்ஷனில் நடித்த விளம்பரமும் அஜித்தின் Nescafe Sunrise காஃபி தூள் விளம்பர வீடியோவும் இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ:

Rare Ad Video: Thalapathy Vijay

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்