கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'இந்தியன் 3' படத்தின் படப்பிடிப்பு இன்னும் சிறிது மீதமுள்ள நிலையில், அந்தப் படம் கிட்டத்தட்ட கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தெரிகிறது. 'இந்தியன் 2' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், 'இந்தியன் 3' படத்தின் மீது ஷங்கர் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், தயாரிப்பாளர் சுபாஸ்கரன் ரஜினியிடம் போன் செய்து ஷங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தக் கோரிக்கை விடுத்ததாகவும், அவரது கோரிக்கையின் அடிப்படையில் ஷங்கரிடம் ரஜினி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து, விரைவில் 'இந்தியன் 3' திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், அதே நேரத்தில், பட்ஜெட்டை குறைக்க வேண்டும் என்று சுபாஸ்கரன் விடுத்த கோரிக்கையை ஷங்கர் ஏற்கவில்லை என்றும், இதனால் இன்னும் அதிருப்தியில்தான் ஷங்கர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், ரஜினி தலையிட்டதன் காரணமாக 'இந்தியன் 3' திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.