இதன் அடுத்தபாகமான 'வார் 2' படத்தில் ஹ்ருத்திக் ரோஷனுடன் இணைந்து நடித்துள்ளார் ஜூனியர் என் டி ஆர். இந்த படத்தை பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்க, அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் ஆந்திரா மற்றும் தெலங்கானா உரிமையை ஜூனியர் என் டி ஆரின் நெருங்கிய நண்பரான நாகவம்சி கைப்பற்றியுள்ளார். இதில் ஆச்சர்யபடத்தக்க தகவல் என்னவென்றால் இதன் உரிமை சுமார் 90 கோடி ரூபாய்க்கு விற்கபட்டுள்ளது என்பதுதான். படடத்தில் ஜூனியர் என் டி ஆர் இருப்பதால் இவ்வளவு பெரிய தொகை கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.