ஆக்‌ஷன் ஹீரோவுக்கான வெற்றிடத்தை சூர்யா சேதுபதி நிரப்புவார் – இயக்குனர் விக்ரமன் ஆருடம்!

vinoth

திங்கள், 7 ஜூலை 2025 (09:37 IST)
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் ஃபீனிக்ஸ் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சாம் சி எஸ் இசையமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஃபீனிக்ஸ் படம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு ஷூட்டிங் உள்ளிட்ட பணிகள் எல்லாம் முடிந்து ஜூலை 4 ஆம் தேதி ரிலீஸானது.

ரிலீஸுக்குப் பிறகு இந்த படம் பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. சூர்யாவின் ஆக்‌ஷன் காட்சிகள் மட்டும் ரசிகர்களுக்கு ஓரளவு திருப்தியை அளித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக படத்துக்கு பெரிதாக வசூலும் ஒன்றுமில்லை.

இந்நிலையில் சூர்யா பற்றி இயக்குனர் விக்ரமன் தெரிவித்துள்ள கருத்து இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அதில் “விஜய் சினிமாவை விட்டு செல்கிறார். அஜித்தும் கார் ரேஸ்களில் ஆர்வமாக உள்ளார். விஷாலும் இப்போது அதிக படங்களில் நடிப்பதில்லை. அதனால் தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் கதாநாயகர்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையைப் போக்க சூர்யா சரியான ஆளாக இருப்பார்.  அந்த வெற்றிடத்தை சூர்யா நிரப்புவார்” எனக் கூறியுள்ளார். விக்ரமனின் இந்த வார்த்தைகள் மிகைப்படுத்தப்பட்டதாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்