ரண்வீர் சிங்குக்கு ஜோடியாக இந்தி சினிமாவில் அறிமுகமாகும் தெய்வ திருமகள் புகழ் சாரா!

vinoth

திங்கள், 7 ஜூலை 2025 (09:21 IST)
தெய்வத்திருமகள் படத்தில் விக்ரம்முக்கு இணையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்தவர் பேபி சாரா. அந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் ரசிக்கப்பட்ட குழந்தை நட்சத்திரங்களில் ஒருவரானார். அதன் பின்னர் சைவம் மற்றும் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட சில படங்களில் சாரா நடித்திருந்தார்.

இந்நிலையில் இப்போது சாரா, பிரபல இந்தி நடிகர் ரண்வீர் சிங் நடிக்கும் துராந்தர் என்ற இந்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்த படத்தின் போஸ்டர் இணையத்தில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

சாராவைக் குழந்தை நட்சத்திரமாகவே தமிழ் ரசிகர்கள் நினைவில் வைத்துள்ளார்கள். அதனால் அவர் கதாநாயகியாக அறிமுகமாவது ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக குழந்தை நட்சத்திரமாகக் கலக்குபவர்கள் வளர்ந்த பின்னர் சினிமாவில் ஜொலிப்பது அரிது. ஆனால் இப்போது சாரா கதாநாயகியாக அறிமுகமாகி தனது இன்னிங்ஸை தொடங்குகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்