இதையடுத்து 2023 ஆம் ஆண்டில் அவர் நடிப்பில் ரிலீஸ் ஆன பதான் மற்றும் ஜவான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஹிட்டடித்து 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்தன. இந்நிலையில் அவர் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கும் டன்கி திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாகும் என ஷாருக் கான் அறிவித்திருந்தார்.
ஆனால் இப்போது அந்த படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப் படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முடியாததால் இந்த தள்ளிவைப்பு நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அதே தேதியில் ரிலீஸூக்கு திட்டமிட்டிருந்த பிரபாஸின் சலார் திரைப்படத்துக்கு கூடுதல் திரையரங்குகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.