நடிகர் கார்த்தி வெளியேறியதால் டி ஆர் பி சரிந்த செம்பருத்தி சீரியல்!

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (08:29 IST)
செம்பருத்தி சீரியலில் கார்த்தி கதாபாத்திரம் சில மாதங்களுக்கு முன்னர் நீக்கப்பட்ட நிலையில் இப்போது அவருக்கு பதில் இணையத் தொகுப்பாளர் அக்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நல்ல கவனம் பெற்ற மெகா தொடர் செம்பருத்தி. இதில் கார்த்திக் ராஜ், ஷப்னம் மற்றும் பிரியா ராமன் ஆகியோர் நடித்து வந்தனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ஜி தமிழ் தொலைக்காட்சி டிவிட்டர் பக்கத்தில் ‘செம்பருத்தி தொடரின் வெற்றிக்காக கார்த்திக்கின் அர்ப்பணிப்பும் உழைப்பும் பாராட்டத்தக்கது. ஆனால் எதிர்பாராத சில காரணங்களால் கார்த்திக்கு பதில் வேறு ஒருவர் நடிக்க உள்ளார். ஆனால் எதிர்காலத்தில் கார்த்திக்கோடு இணைந்து ஜி தமிழ் பணியாற்றும்’ எனக் கூறியது.

இந்நிலையில் இப்போது கார்த்திக்கின் கதாபாத்திரத்துக்கு பதிலாக பிஹைண்ட்வுட்ஸ் உள்ளிட்ட இணைய சேனலில் தொகுப்பாளராக பணியாற்றிய அக்னி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவரது புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் கார்த்தி வெளியேறியதில் இருந்து அந்த சீரியலுக்கு முன்னர் இருந்த பார்வையாளர்கள் இல்லை என்று சொல்லப்பட்டது. அதன் காரணமாக டி ஆர் பியில் அந்த சீரியல் அதள பாதாளத்துக்கு சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்