அந்த படத்தைவிட நான்கு மடங்கு சண்டைக்காட்சிகள் இருக்கும்… வலிமை அப்டேட் கொடுத்து எதிர்பார்ப்பை ஏற்றிய ஸ்டண்ட் மாஸ்டர்!

சனி, 3 ஏப்ரல் 2021 (15:39 IST)
வலிமை படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் பற்றி ஸ்டண்ட் இயக்குனர் திலீப் சுப்பராயன் அப்டேட் கொடுத்துள்ளார்.

இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். ஆனால் படம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் படத்தின் டைட்டில் போஸ்டர் கூட இன்னும் படத்தயாரிப்பாளரால் வெளியிடப்படவில்லை. இந்த படத்தில் கதாநாயகியாக ஹூமா குரேஷியும் வில்லனாக நடிகர் கார்த்திகேயாவும் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகள் மே மாதத்தில் இருந்து தொடங்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் திலீப் சுப்பராயன் அளித்துள்ள ஒரு நேர்காணலில் ‘நானும் இயக்குனர் ஹெச் வினோத்தும் இணைந்து பணியாற்றிய தீரன் அதிகாரம் ஒன்று படத்தை விட நான்கு மடங்கு சண்டைக் காட்சிகள் வலிமைப் படத்தில் இருக்கும்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்