8 ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த விஷால் படம்… ஓடிடியில் ரிலீஸ்!

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (08:23 IST)
நடிகர் விஷால் மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகி 8 ஆண்டுகளாக ரிலிஸாகாமல் இருக்கும் மத கஜ ராஜா திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

விஷால் மற்றும் சுந்தர் சி கூட்டணி முதல் முறையாக சேர்ந்த திரைப்படம் மத கஜ ராஜா. 8 ஆண்டுகளுக்கு முன்பே இந்த படம் முடிந்தாலும், படத்தை தயாரித்த ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்டின் கடன்கள் காரணமாக இன்னும் வெளியாகாமல் உள்ளது. விஷாலும் போராடிப் பார்த்து ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் அந்த படத்தை கைவிட்டு சென்றுவிட்டார்.

இந்நிலையில் இப்போது 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தை நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையை முடிவு செய்துள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்