தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதா ப்ரதீப் & விக்னேஷ் சிவன் கூட்டணியின் LIK?

vinoth

திங்கள், 21 ஏப்ரல் 2025 (11:10 IST)
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ப்ரதீப் ரங்கநாதன் LIK படத்தில் நடித்து வருகிறார்.  இதில் எஸ் ஜே சூர்யா, சீமான் மற்றும் க்ரீத்தி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றன. லலித்குமார் தயாரிக்கிறார் இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது. எதிர்கால காதல் பேண்டசி படமாக இது உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் கோவை மற்றும் சிங்கப்பூரில் அடுத்தடுத்து நடந்தது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் “தீமா” வெளியாகி கவனம் பெற்றது. அதன் பின்னர் ஷூட்டிங் முடிந்து தற்போது பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் பற்றிப் பேசியுள்ள இயக்குனர் விக்னேஷ் சிவன் “உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாட ஒரு திருவிழா தேதியில் இந்த படம் ரிலீஸாகும் “ எனக் கூறியுள்ளார். அதனால் தீபாவளிக்கு இந்த படம் ரிலீஸாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்