நடிகை சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்ட நிலையில், சோபிதா துலிபாலாவை நாக சைதன்யா மறுமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில், பேமிலி மேன், சிட்டாடல் ஆகிய வெப் தொடர்களில் சமந்தா நடித்த நிலையில் அந்த படத்தை, அந்த தொடரை இயக்கிய ராஜ் என்பவருக்கும் சமந்தாவுக்கும் காதல் என்று கிசுக்கப்படுகிறது. இதனை உறுதி செய்யும் வகையில், நடிகை சமந்தா திருப்பதி சென்றபோது இயக்குனர் ராஜ் கூட சென்றதாகவும், இருவரும் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு காளஹஸ்தி கோவிலுக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.