முதல் இரண்டு நாளில் ஹவுஸ்புல் ஆன சுல்தான்: நெகட்டிவ் விமர்சனம் தந்தவர்கள் முகத்தில் கரி!

ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (06:35 IST)
கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கிய சுல்தான் திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியான நிலையில் வெள்ளி சனி ஆகிய இரண்டு நாட்களிலும் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடியதாக விநியோகிஸ்தர்கள் மற்றும் திரையரங்குகள் தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளது
 
இந்த படத்திற்கு வேண்டுமென்றே ஒரு சிலர் நெகட்டிவ் விமர்சனம் செய்ததாக தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்களை மறைமுகமாக தனது டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக தங்களை தாங்களே பத்திரிக்கையாளர் என்று கூறிக்கொள்ளும் யூடியூப் நடத்திக்கொண்டிருக்கும் ஒரு குரூப் இந்த படத்திற்கு மிக மோசமான விமர்சனத்தை அளித்தார்கள். அது கார்த்தி ரசிகர்களுக்கும் சுல்தான் படக்குழுவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது 
 
ஒரு படத்திற்கு வேண்டும் நெகட்டுவ் விமர்சனம் கொடுக்கும் இது போன்றவர்கள் இருக்கும்வரை திரையுலகம் வளராது என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது. இந்த நிலையில் நெகட்டிவ் விமர்சனம் கொடுத்தவர்களின் முகத்தில் கரி பூசும் வகையில் வெள்ளி சனி ஆகிய இரண்டு நாட்களிலும் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இந்த படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி உள்ளது. அது மட்டுமின்றி தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களில் இந்த படம் மிகப்பெரிய வசூலைக் குவித்துள்ளது என்பதும் மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு இந்த படம்தான் அதிக வசூலை முதல் நாளில் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்