யார் என்ன உளறினாலும் உக்காந்து கேப்பீங்களா?... இயக்குனர் செல்வராகவன் கண்டனம்!

vinoth
புதன், 11 செப்டம்பர் 2024 (06:52 IST)
தமிழ் சினிமாவில் மிக இளம் வயதிலேயே இயக்குனராக தனக்கென ஒரு பாணியை உருவாக்கி வெற்றிகளைக் குவித்தவர் செல்வராகவன். அவர் இயக்கிய துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலணி ஆகிய படங்கள் வணிக ரீதியாகவும்  புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் கமர்ஷியலாக வெற்றிப் பெறாவிட்டாலும் நல்ல விமர்சனங்களையும் குவித்தன.

ஆனால் சமீபகாலமாக அவரது படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வியைக் கண்டு வருகின்றன. இடையில் அவர் சாணிக் காயிதம் திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகமாகி கவனம் பெற்றார். இந்நிலையில் இப்போது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கும் போலி ஆன்மிகவாதி மகாவிஷ்ணு விவகாரம் சம்மந்தமாக அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் “என்னங்க இது? யார் நான் ஆன்மிகவாதின்னு சொல்லி என்ன உளருனாலும் போர்வையை போத்திகிட்டு உக்காந்து கேப்பீங்களா?.. அந்த அளவுக்காக தியானம்னா என்னன்னு தெரியாம காஞ்சு போயிருக்கீங்க.. நான் சொல்றேன். தியானம் என்பது ஒன்னுமே இல்ல… கண்ண மூடி மூச்ச இழுத்து விடுங்க. மூச்சுப்பயிற்சிதான். அப்போ இடையில உங்க எண்ணம் டைவர்ட் ஆகலாம். அத கண்ட்ரோல் பண்ணாதீங்க. அது எங்கங்கயோ போயிட்டு திரும்ப வந்துடும். அவ்ளோதான் தியானம். உண்மையான குரு என்பவர் யார் தெரியுமா? நீங்கள் அவரைத் தேடி செல்லவேண்டியதில்லை. அவரே உங்களை தேடி வருவார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்