என் தம்பிக்கு இந்த படம் இன்னொரு பாய்ச்சல்… அயோத்தி படம் பார்த்து பாராட்டிய சீமான்!

Webdunia
ஞாயிறு, 12 மார்ச் 2023 (08:42 IST)
சசிகுமார், புகழ் மற்றும் போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் மந்திரமூர்த்தி இயக்கத்தில் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘அயோத்தி’ திரைப்படம். சமீபத்தில் இந்த படம் வெளியாகி பாஸிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற ஆரம்பித்துள்ளது. அயோத்தியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு புனிதப் பயணம் வரும் ஒரு குடும்பத்தில் நடக்கும் இறப்பு மற்றும் அது சம்மந்தமான பிரச்சனைகளை மனிதம் கலந்து சொல்லி இருக்கும் இந்த படம் இப்போது பார்வையாளர்களைக் கவர தொடங்கியுள்ளது. இரண்டாவது வாரத்திலும் கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் படத்தை பல்துறையை சேர்ந்தவர்களும் பாராட்டி வருகின்றனர்.

படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், திரைப்பட இயக்குனருமான சீமான். அவரது பேச்சில் “இந்த திரைப்படம் தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமான படம். என் தம்பி சசிகுமாருக்கு இது இன்னொரு பாய்ச்சல். அந்தளவுக்கு சிறந்த படைப்பு. மதம் வேதம் எல்லாத்தயும் தாண்டி மனிதம் புனிதமானதுன்னு சொல்லுது இந்த படம்.  இந்த மாதிரி படங்களைக் கொண்டாடவில்லை என்றால், இதுபோன்ற படைப்பு அரிதிலும் அரிதாக போய்விடும்” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்