கன்னட சினிமாவில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய ராஷ்மிகா தற்போது பேன் இந்தியா நடிகையாக அறியப்படுகிறார். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ள அவரை ரசிகர்கள் செல்லமாக நேஷனல் க்ரஷ் என அழைத்து வருகின்றனர். பாலிவுட்டில் அவர் நடித்த அனிமல் உள்ளிட்ட படங்கள் பெருவெற்றி பெற்றன.
இந்நிலையில் நேஷனல் க்ரஷாக இந்திய சினிமாவையேக் கலக்கி கொண்டிருக்கும் ராஷ்மிகா தன்னுடைய தங்கையோடு நேரம் செலவிட முடியவில்லை என வருத்தத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் “என் தங்கைக்கு வயது 13தான். அவள் என்னை விட 16 வயது இளையவள். அவள் செய்யும் குறும்புத் தனங்களை நான் வெகுவாக ரசிப்பேன். ஆனால் இப்போது பிஸியாக படங்களில் நடித்து வருவதால் அவளோடு சேர்ந்திருக்க முடியவில்லை. அவளோடு நேரம் செலவிட வேண்டும் என நினைத்தாலும் ஒப்புக்கொண்ட படங்களின் பணிகள் குறுக்கே வந்து நிற்கின்றன” எனக் கூறியுள்ளார்.