முடிகொட்டி வழுக்கைத் தலையுடன் காணப்படும் பிரபாஸ்… புகைப்படம் உண்மையா?

vinoth

சனி, 19 ஜூலை 2025 (07:42 IST)
பாகுபலி இரண்டு பாகங்களும் சேர்ந்து பிரபாஸை இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆக்கியது. அதையடுத்து அவர் நடித்த பேன் இந்தியா படங்கள் எல்லாம் தோல்வி அடைந்தாலும் கடைசியாக ரிலீஸான கல்கி திரைப்படம் 1100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்தது.

இந்த படத்துக்குப் பிறகு  தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான மாருதியுடன் ’ராஜாசாப்’ படத்துக்காக இணைந்தார் பிரபாஸ். இது தவிர இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்திலும் நடிக்கவுள்ளார். இந்நிலையில் நேற்று திடீரென இணையத்தில் பிரபாஸின் புகைப்படம் வெளியாகி வைரல் ஆனது. அதில் பிரபாஸ் முடிகொட்டி வழுக்கைத் தலையுடன் காணப்படுகிறார்.

இந்த புகைப்படம் உண்மையானதா அல்லது மார்ஃப் செய்யப்பட்டதா என சமூகவலைதளங்களில் ஒரு பெரும் விவாதமே நடந்து வருகிறது. சமீபகாலமாக பிரபாஸ் தன்னுடைய எல்லா படங்களிலும் விக் வைத்துதான் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்