விருது வழங்குபவர்களை விட ரசிகர்களுக்கு ரசணை அதிகம் – இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் கருத்து !

Webdunia
திங்கள், 13 ஜனவரி 2020 (09:58 IST)
தான் இசையமைத்த மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தின் பாடல்கள் எந்தவொரு இசை விருதுகளிலும் சேர்க்கப்படாதது குறித்து இசையமைபபளர் ஷான் ரோல்டன் கருத்து தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையொல் கடந்த ஆண்டு வெளியான மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதிலும் குறிப்பாக வெள்ளாட்டு கண்ணால மற்றும் கோடி அருவி போன்ற பாடல்கள் இப்போதும் இணையதளங்களில் வைரல் ஹிட்.

ஆனாலும் கடந்த ஆண்டின் சிறந்த பாடல் விருதுகளில் இந்த படத்தின் எந்த பாடலும் இடம்பிடிக்கவில்லை. இது குறித்து ஷான் ரோல்டன் தனது டிவிட்டரில் ‘மெஹந்தி சர்க்கஸ் திரைப்படம் எந்த இசை விருது விழாவிலும் போட்டியிடவில்லை என்பது எனக்கு ஒன்றை கற்பித்துள்ளது. இசை ரசிகர்கள் விருது விழாவினை விட நல்ல இசை ரசனை உள்ளவர்கள் . வரும் ஆண்டு இசை ரசிகர்களோடு இருக்கும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்