கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றுவந்த இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில்... மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பு நவம்பர் 29, 2019 அன்று துவக்கி 44 நாட்கள் இடைவிடாமல் நடந்து முடிந்தது. அத்துடன் இப்படத்தின் 90 சதவீத படத்தை முடித்திருக்கிறோம். இந்த மறக்கமுடியாத படப்பிடிப்புக்கு கடவுளுக்கு நன்றி, கன்னியாகுமரி மாவட்ட மக்கள், எனது அற்புதமான குழு மற்றும் அற்புதமான நயன்தாராவுக்கு நன்றி என கூறியுள்ளார்.