உங்களுக்கு எல்லாம் குடும்பம், குழந்தை குட்டியே இல்லையா? விஜய் நாயகி ஆவேசம்

Webdunia
திங்கள், 13 ஜனவரி 2020 (09:50 IST)
விஜய் நடித்த ’புலி’ உள்பட பல திரைப்படங்களில் முன்னணி வேடத்தில் நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா.  இவர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது தனது கவர்ச்சியான மற்றும் அழகான புகைப்படங்களை அந்த பக்கங்களில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்
 
இந்த நிலையில் இவரது சமூக வலை பக்கத்தை தொடரும் ரசிகர் ஒருவர் நந்திதாவுக்கு திடீரென ஆபாச குறுஞ்செய்தியை அவரது மொபைலுக்கு அனுப்பியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த நந்திதா அந்த நபரை வெளியுலகத்திற்கு அம்பலப்படுத்தும் வகையில் அந்த ஆபாச செய்தியை அனுப்பியவர் பெயர் மற்றும் அந்த செய்தியையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் 
 
மேலும் இது போன்ற நபர்களை என்ன செய்வது இவர்களுக்கெல்லாம் குடும்பம், குழந்தை குட்டி என்று ஒன்றுமே இல்லையா? என்று ஆபாசமாக கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். நந்திதாவின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்