குதிரையோடு புல் தின்னும் இந்த மான்.. சல்மான் கான்! – ட்விட்டரில் வைரலாகும் வீடியோ!

Webdunia
வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (14:17 IST)
ஊரடங்கு உத்தரவால் ஊர் உலகமே முடங்கி வீட்டில் உள்ள சூழலில் சல்மான்கான் செய்த செயல் தற்போது பாலிவுட் வட்டாரத்தில் ட்ரெண்டாகி உள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பிரபலங்கள் தங்கள் வீடுகளிலேயே பொழுதை கழித்து வருகின்றனர். திரைத்துறை ஊழியர்களுக்கு நடிகர் சல்மான்கான் நிதியுதவி செய்தது சமீபத்தில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது.

இந்நிலையில் தற்போது சல்மான்கானின் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. அதில் குதிரைக்கு புல் கொடுக்கும் சல்மான்கான் தானும் அதை தின்று பார்க்கிறார். குதிரையோடு சேர்ந்து சல்மான்கான் புல் சாப்பிடும் வீடியோ அவரது ரசிகர்களால் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்