பிரபாஸுக்கு உடல்நலக் குறைவு… வெளிநாட்டில் சிகிச்சை- நிறுத்தப்பட்ட சலார் ஷூட்டிங்?

Webdunia
திங்கள், 13 மார்ச் 2023 (10:17 IST)
பாகுபலி இரண்டு பாக படங்களுக்கு பிறகு இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி1,2 ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து அவர் புகழும் பெருகிறது. மார்க்கெட்டும் எகிறியது.  ஆனால் அதன் பின்னர் அவர் நடித்த சாஹோ மற்றும் ராதே ஷ்யாம் ஆகிய இரு படங்களும் வெற்றி பெறவில்லை. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் பட டீசரும் கடுமையான கேலிகளுக்கு ஆளானது. பாகுபலிக்கு பிறகு ஹிட் கொடுக்க முடியாமல் பிரபாஸ் தவித்து வரும் நிலையில் சலார் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதற்குக் காரணம் அந்த படத்தின் இயக்குனர் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல் என்பதுதான்.

இந்நிலையில் விறுவிறுப்பாக நடந்து வந்த சலார் ஷூட்டிங் பிரபாஸின் உடல்நலக்குறைவு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிகிச்சைக்காக அவர் வெளிநாட்டுக்கு சென்றுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் சலார் ஷூட்டிங் நிறைவடைய மேலும் தாமதம் ஆகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்