இதையடுத்து அவர் ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில வாரங்களாக நடந்து வந்த நிலையில் சமீபத்தில் அதில் ஜூனியர் என் டி ஆர் கலந்துகொண்டார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ருக்மிணி வசந்த் ஒப்பந்தமாகியுள்ளார். கன்னடத்தில் வெளியான சப்த சாகரடச்சோ எல்லோ என்ற படத்தின் மூலம் கவனம் பெற்ற ருக்மிணி அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் ஒப்பந்தம் ஆகிவருகிறார். விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தில் நடித்த அவர் தற்போது சிவகார்த்திகேயனின் மதராஸி படத்திலும் நடித்து வருகிறார்.