96 என்ற மென்சோகப் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் பிரேம்குமார் அடுத்து கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் மெய்யழகன் என்ற படத்தை இயக்கினார். இந்த படமும் அவரின் முந்தைய படம் போல நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இந்த பட ரிலீஸின் போதே அவர் தன்னுடைய அடுத்த படம் 96 படத்தின் இரண்டாம் பாகம் என அறிவித்தார்.
இந்த படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. பிரேம் குமாரின் முந்தையப் படங்களைப் போல இல்லாமல் விக்ரம் 64 படம் ஒரு ஆக்ஷன் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிக்க கன்னட சினிமாவை சேர்ந்த ருக்மிணி வசந்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியின் ஏஸ் மற்றும் சிவகார்த்திகேயனின் மதராஸி ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பரிச்சயமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.