இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சிவகார்த்திகேயனிடம் அவர் நடித்த படங்களில் எந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஆசை என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் “எனக்கு இரண்டாம் பாகங்களில் நடிப்பதில் பயம் உண்டு. ஏனென்றால் அது முதல் பாகத்தின் வெற்றிக்கு நியாயம் செய்யும் விதமாக அமையவேண்டும். அப்படி ஒரு படம் நடிக்கவேண்டும் என்றால் நான் மாவீரன் படத்தின் இரண்டாம் பாகத்தில்தான் நடிப்பேன்” எனக் கூறியுள்ளார்.