சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடரான 'எதிர்நீச்சல் 2', இனி வாரத்தின் ஆறு நாட்களும் ஒளிபரப்பாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய நிகழ்ச்சி ஒன்று தொடங்கப்பட இருப்பதால், இந்த தொடரின் ஒரு நாள் ஒளிபரப்பு நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
'எதிர்நீச்சல் 2' தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் இனி சனிக்கிழமைகளில்புதிய நிகழ்ச்சி 'டாப் குக் டூப் குக் சீசன் 2' ஒளிபரப்பாகவுள்ளதால், 'எதிர்நீச்சல் 2' இனி திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே ஒளிபரப்பாகும்.
எதிர்நீச்சல்' முதல் பாகம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால், அதே நடிகர், நடிகைகளுடன் தொடர்ச்சியாக ஒளிபரப்பாகும் இரண்டாவது பாகத்திற்கு அந்த அளவுக்கு வரவேற்பு இல்லை என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.