அனிருத்துக்குப் போட்டியா சாய் அப்யங்கர்?… ரெண்டு பேரும் சேர்ந்து உருவாக்கி இருக்கும் பாட்டு!

vinoth

புதன், 30 ஜூலை 2025 (12:35 IST)
தர்பார் படத்தின் தோல்விக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் எந்த படமும் இயக்காமல் இடைவேளை எடுத்துக் கொண்டார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்.  அதையடுத்து அவர் சல்மான் கானை வைத்து இயக்கிய ‘சிக்கந்தர்’ திரைப்படமும் படுதோல்வி படமாக அமைந்தது. இதையடுத்து அவர் ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இப்போது இருக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து பின் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் இன்று மாலை வெளியாகவுள்ளது. இந்த பாடலை அனிருத் இசையில் சாய் அப்யங்கர் பாடியுள்ளார். சூப்பர் சுப்பு எழுதியுள்ளார்.

சாய் அப்யங்கர் தொடர்ச்சியாக முன்னணி கதாநாயகர்கள் மற்றும் இயக்குனர்கள் படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார். இதனால் அனிருத்துக்கு சரியான போட்டியாக அவர் உருவாகி வருகிறார் என சொல்லப்பட்ட நிலையில் இப்போது இருவரும் இணைந்து ஒரு பாடலுக்காகப் பணியாற்றி இருப்பது அவர்களுக்குள் இருக்கும் நட்பை உறுதிபடுத்துகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்