எந்த ஓடிடியிலும் இல்லாமல் நேரடியாக யுடியூபில் வெளியாகும் அமீர்கானின் ‘சிதாரா ஜமீன் பார்’!

vinoth

புதன், 30 ஜூலை 2025 (13:22 IST)
பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அமீர்கானின் அண்மைய இரண்டு திரைப்படங்களான ‘தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான்’ மற்றும் ‘லால் சிங் சத்தா’ ஆகிய திரைப்படங்கள் வணிக ரீதியாக தோல்விப் படங்களாக அமைந்தன.  இதையடுத்து அவர் தன்னுடைய ஹிட் படமான ‘தாரே ஜமீன் பார்’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘சித்தாரே ஜமீன் பார்’ படத்தை தயாரித்து நடித்தார்.

இந்த படத்தைத் தமிழகத்தைச் சேர்ந்த இயக்குனர் RS பிரசன்னா இயக்கினார். கடந்த ஜூன் 20 ஆம் தேதி வெளியான இந்த படம் சுமார் 267 கோடி ரூபாய் அளவுக்கு திரையரங்குகள்  மூலமாக வருவாய் ஈட்டியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் குறித்து அமீர்கான் வித்தியாசமான ஒரு முயற்சியை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த படத்தை எந்த ஓடிடி தளத்திலும் ரிலீஸ் செய்யாமல் நேரடியாக யுடியூபில் கட்டணம் கட்டி பார்த்துக் கொள்ளும் வகையில் ரிலீஸ் செய்கிறார். இந்தியாவில் இந்த படம் 100 ரூபாய் கட்டி பார்க்கலாம். இதை சினிமாவை மேலும் ஜனநாயகப்படுத்தும் முறையாகப் பார்ப்பதாக அமீர்கான் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்