நடிகை ரம்யா குறித்து இன்ஸ்டாகிராமில் அவதூறான கருத்துகளை பதிவிட்டதாக 48 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் சமூக வலைதள வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் தர்ஷன் கொலை வழக்கில் சிக்கினார். இது குறித்து நடிகை ரம்யா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார். ரம்யாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தர்ஷனின் ரசிகர்கள் தகாத வார்த்தைகளையும், ஆபாசமான கருத்துகளையும் கமென்ட் பகுதியில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.