குட் பேட் அக்லி படத்தில் இணைந்த பிரபல காமெடியன்… அஜித்தோடு முதல் முறையாக காம்பினேஷன்!

vinoth
செவ்வாய், 25 ஜூன் 2024 (08:05 IST)
அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பொருளாதார காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் திட்டமிடப்பட்டதை விட முன்பே தொடங்கி தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

ஐதராபாத்தில் நடந்த முதல் கட்ட ஷூட் நிறைவடைந்துள்ள நிலையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சியான ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில் “உங்கள் அர்ப்பணிப்பையும் ஈடுபாட்டையும் பார்த்து வியந்து போய்விட்டேன் சார். எப்போதும் உங்கள் நன்றிக்குரியவன் சார். எப்போதும் உங்களுக்கு எனது அன்புகள் சார்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே சில நடிகர்கள் நடிக்க ஒப்பந்தமான நிலையில் இப்போது ரெட்டின்ஸ் கிங்ஸ்லி இணைந்துள்ளார். சமீபகாலமாக நகைச்சுவையில் கலக்கி வரும் ரெட்டின்ஸ் முதல் முறையாக அஜித்தோடு இந்த படத்தில் இணைகிறார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்