மீண்டும் சொதப்பிய விடாமுயற்சி படக்குழு… குட் பேட் அக்லி படத்துக்காக ஜப்பான் செல்லும் அஜித்!

vinoth

புதன், 5 ஜூன் 2024 (07:53 IST)
அஜித் இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில்  கடந்த சில மாதங்களாக நடந்த நிலையில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. லைகா புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கும்  இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.  இதுவரை 60 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் ஷூட்டிங் எதிர்பார்த்ததை விட முன்பாகவே தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

 விடாமுயற்சி திரைப்படம் தாமதமாகிக் கொண்டே இருக்கும் நிலையில் அதற்கு நேர் எதிராக ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் ஷூட்டிங் எதிர்பார்த்ததை விட வேகமாக நடந்து வருகிறது. ஐதராபாத்தில் தொடர்ந்து ஒரு மாதம் ஷூட்டிங் நடந்த நிலையில் ஒரு இடைவெளி விடப்படும் என சொல்லப்படுகிறது. ஆனால் இப்போது விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்குவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளதால் அஜித் குட் பேட் அக்லி படத்துக்காக ஜப்பானுக்கு செல்ல தயாராகி வருகிறாராம். இதனால் விடாமுயற்சி படத்துக்கு முன்பே குட் பேட் அக்லி படம் ரிலீஸாகி விடுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்