சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் இவர்தான் கதாநாயகி!

Webdunia
புதன், 28 ஜூலை 2021 (17:04 IST)
சிவகார்த்திகேயன் தமிழ் மற்றும் தெலுங்கில் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள டாக்டர் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது என்றும் அவர் தற்போது அயலான் மற்றும் டாம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்த படத்தை இயக்கயிருப்பது பிரபல தெலுங்கு இயக்குனர் என்ற தகவல் வெளிவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் வெளியான தெலுங்கு திரைப்படம் ’ஜாதி ரட்னலு’. இந்த திரைப்படத்தை இயக்கிய அனுதீப்  என்பவர்தான் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக மாறி வருகிறார் ராஷ்மிகா என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்