பிரம்மாண்ட படங்கள் எடுப்பது அதிக ரிஸ்க்கான வேலை என்பதால் ரிஸ்க்கை குறைப்பதற்காக இரண்டு ஹீரோக்கள் மற்றும் வெவ்வேறு மொழிகளில் இருந்து நடிகர்களை நடிக்க வைத்து அந்தந்த மாநில ரசிகர்களுக்கு அந்த மொழியில் உருவாக்கப்பட்ட படம் போன்றதொரு தோரணையை இயக்குனர்கள் கொடுக்கின்றனர். பொதுவாக தெலுங்கு சினிமாவில் இதுபோல ஹீரோக்கள் இணைந்து நடிப்பது அதிசயம். ஆனால் அங்கு கூட இது சாதாரணமாக இப்போது நடந்து வருகிறது.