பைனான்ஸ் பிரச்சனையில் சிக்கிய படங்களுக்கு எல்லாம் வாழ்வளிக்கு சோனி லைவ்… இந்த முறை ஜி வி பிரகாஷ் படம்!

Webdunia
புதன், 28 ஜூலை 2021 (16:59 IST)
ஜி வி பிரகாஷ் நடிப்பில் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ரிலிஸாகாமல் இருக்கும் ஐங்கரன் திரைப்படம் இப்போது ஓடிடியில் ரிலிஸாக உள்ளது.

டெக்னலாஜி வில்லத்தனத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் கருத்தை மைய கருவாக கொண்டு உருவாகிய "ஐங்கரன்"  படத்தை ரவி அரசு இயக்கினார்.  இவர் இதற்கு முன்னர் ஈட்டி என்ற வெற்றிப்படத்தை இயக்கியவர். காமன்மேன் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் பி.கணேஷ் தயாரித்த இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். 

கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே முடிக்கப்பட்ட இந்த திரைப்படம் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் இப்போது சோனி லைவ் ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ளது. ஏற்கனவே இதுபோல பைனான்ஸ் பிரச்சனையில் சிக்கிய நரகாசூரன் திரைப்படத்தையும் சோனி லைவ் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்