இப்போதும் எனக்கு வாய்ப்பு வர படையப்பாதான் காரணம்… ரம்யா கிருஷ்ணன் நெகிழ்ச்சி!

Webdunia
சனி, 29 ஜூலை 2023 (09:48 IST)
ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியோடு மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, சுனில், ஜாக்கி ஷ்ராஃப் மற்றும் ரம்யா கிருஷ்ணன் என பலமொழி கலைஞர்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் நேற்று சென்னையில் நடந்தது.

படையப்பா மற்றும் பாபா படங்களுக்குப் பிறகு ரம்யா கிருஷ்ணன் ரஜினியோடு இணைந்து ஜெயிலர் படத்தில் நடிக்கிறார். அது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரம்யா கிருஷ்ணன் “இப்போதும் எனக்கு நடிக்க வாய்ப்புகள் வருகிறதென்றால் அதற்குக் காரணம் படையப்பா திரைப்படத்தில் நான் நடித்த நீலாம்பரி வேடம்தான்.” என பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்