'ஜெயிலர்’ ஆடியோ விழாவில் ரஜினி சொன்ன பருந்து-காக்கா கதை..

சனி, 29 ஜூலை 2023 (09:02 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த் பருந்து மற்றும் காக்கா கதையை கூறியதை அடுத்து ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
அவர் பேசியதாவது: பறவைகளில் காக்கா எப்போதும் பலருக்கு தொல்லை கொடுக்கும், ஆனால் பருந்து யாருக்கும் தொல்லை கொடுக்காது. கழுகை கூட காக்கா டிஸ்டர்ப் செய்யும், ஆனால் கழுகு எதுவுமே செய்யாது. அது அடுத்த கட்டத்திற்கு சென்று விடும். 
 
காகம் அதற்கு போட்டியாக உயர பறக்க முயற்சிக்கும், ஆனால் முடியாது.  நான் காக்கா, கழுகு என்று சொன்னவுடன் இவரைத்தான் சொல்கிறேன் என்று சமூகவலைகளில் சொல்வார்கள். குறைக்காத நாயும் இல்லை, குறை சொல்லாத வாயும் இல்லை, இது ரெண்டும் இல்லாத ஊரும் இல்லை. நாம் நம் வேலையை பார்த்து விட்டு போயிட்டே இருக்கணும் என்று ரஜினிகாந்த் பேசினார்
 
 ரஜினிகாந்தின் இந்த பேச்சு  காக்கா என்பது விஜய்யை தான் குறிக்கிறது என்றும் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு விஜய் ஆசைப்படுவதால் அவரை மறைமுகமாக ரஜினி பேசி உள்ளார் என்றும் சமூக வலைதளங்களில் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்