ராம்கோபால் வர்மாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 26 நவம்பர் 2021 (16:57 IST)
பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா கடந்த சில ஆண்டுகளாக ஆபாசம் கலந்த கவர்ச்சி படங்களை இயக்கி வந்தார் என்பதும் அந்த படங்கள் ஓடிடி தளத்தில் சக்கைபோடு போட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது தற்காப்பு கலை குறித்த திரைப்படம் ஒன்றை இயக்கி உள்ளார். தமிழில் ;பெண்; என்றும் ஹிந்தியில் ’லடுக்கி’ என்றும் டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் டிசம்பர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவித்துள்ளார் 
 
இந்த படத்தில் பூஜா பலேஹர் என்பவர் தற்காப்புக்கலை கலைஞராக நடித்துள்ளார் என்பதும் இவர் உண்மையிலேயே ஒரு தற்காப்புக்கலைஞர் என்பதும், இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்றும் கூறப்படுகிறது
 
டிசம்பர் 10ஆம் தேதி இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக ராம்கோபால் வர்மா அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்