சன் பிக்சர்ஸ்க்கு மட்டும் தனி சட்டமா? அண்ணாத்த ஓடிடி ரிலீஸ் சர்ச்சை!

வியாழன், 25 நவம்பர் 2021 (10:57 IST)
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள அண்ணாத்த திரைப்படம் இன்று முதல் நெட்பிளிக்ஸில் பிரிமியர் செய்யப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படம் கடந்த தீபாவளியன்று வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வசூலில் கையைக் கடிக்காமல் போனது. இந்நிலையில் இன்று முதல் ஓடிடியில் ரிலீசாகி உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த ‘அண்ணாத்த’ திரைப்படம் இன்று முதல் சன் நெக்ஸ்ட் ஓடிடியிலும், நெட்பிளிக்ஸ் ஓடிடியிலும் ரிலீஸாகியுள்ளது.

இது சம்மந்தமாக இப்போது புதிதாக ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. தமிழ் சினிமாவில் திரையரங்கில் வெளியாகும் ஒரு படம் 30 நாட்களுக்குப் பின்னர்தான் ஓடிடியில்தான் வெளியிடவேண்டும். ஆனால் அண்ணாத்த ரிலிஸாகி 21 நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் ஓடிடியில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அண்ணாத்த படத்தை வெளியிட்டிருப்பது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

திமுக ஆட்சி தொடங்கியதில் இருந்து சன் பிக்சர்ஸின் ஆதிக்கம் சினிமாத்துறையில் அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதை உறுதி செய்வது போல அண்ணாத்த ஓடிடி ரிலீஸ் அமைந்திருக்கிறது. இதனால் மற்ற தயாரிப்பாளர்களும் இஷ்டம் போல தங்கள் படங்களை ஓடிடியில் ரிலிஸ் செய்துகொள்ளும் முடிவை எடுக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்