"அல்ட்ரா மாடர்ன் இளைஞனை இயக்கும் ராம்" - சித்தார்த்தின் நடிப்பு சரித்திரம் பேசுமா?

Webdunia
புதன், 31 ஜூலை 2019 (17:32 IST)
தமிழ் சினிமாவின் பொக்கிஷ இயக்குனர் ராம்  கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு என தனது ஒவ்வொரு படைப்பிலும் தனித்துவத்தை காட்டி திறமை வாய்ந்த இயக்குனர்களில் ஒருவராக தன்னை அடையாளப்படுத்தி தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்து வருகிறார். 


 
அந்த வகையில் கடைசியாக மம்முட்டியை வைத்து பேரன்பு படத்தை இயக்கி ரசிகர்களை வியப்படையவைத்த ராம் தற்போது தனது அடுத்த படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம். இப்படத்தில் நடிகர் சித்தார்த் ஹீரோவாக நடிக்கவிருக்கிறாராம். 
 
சித்தார்த் தற்போது சசி  இயக்கத்தில் உருவாகிவரும் சிவப்பு மஞ்சள் பச்சை, அறிமுக இயக்குனர் சாய் சங்கர் இயக்கத்தில் அருவம், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், ஷங்கரின் இந்தியன்2 உள்ளிட்ட டஜன் கணக்கில் படங்களை கைவசம் வைத்துகொண்டு படு பிஸியாக நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் இந்த படங்ககளை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிக்க சித்தார்த் முடிவு செய்திருக்கிறார். ராம் சித்தார்த்திடம் கதை சொல்லி ஒப்புதல் வாங்கி விட்டதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. ஆனால் தயாரிப்பாளர் யார் என முடிவாகவில்லையாம்.  அதில் சில சிக்கல் இருப்பதால் நடிகர் சித்தார்த்தே படத்தை தயாரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
தமிழ் இனம், மொழிக்காக போராடும் ஒரு அல்ட்ரா மார்டன் இளைஞனின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகவுளள இப்படத்தின்  படப்பிடிப்பு கூடிய விரைவில் துவங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்