ரஜினியின் ஜீப்பில் இப்படியொரு குறியீடா?

Webdunia
வெள்ளி, 2 ஜூன் 2017 (15:29 IST)
‘காலா’ படத்தில் ரஜினி பயன்படுத்தும் ஜீப் எண், மறைமுகமாக அம்பேத்கரைக் குறிப்பதாக கூறப்படுகிறது.


 

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் படம் ‘காலா’. இந்தப் படத்தில் ரஜினி பயன்படுத்தும் ஜீப்பின் பதிவு எண் MH 01 BR 1956. இதில், BR என்பது, டாக்டர் அம்பேத்கரைக் குறிப்பதாகக் கூறுகின்றனர். அம்பேத்கரின் முழுப்பெயர், பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர். சுருக்கமாக, பி.ஆர். அம்பேத்கர் என்று அழைக்கப்படுவார். அதையும், அம்பேத்கர் இறந்த வருடமான 1956யும் சேர்த்துதான் ஜீப்பின் பதிவு எண்ணாக வைத்துள்ளார் பா.இரஞ்சித் என்கிறார்கள்.

இந்த வாதத்துக்கு வலுசேர்க்கும் விதமாக, பா.இரஞ்சித்தின் ட்விட்டர் ஐடியையும் மேற்கோள் காண்பிக்கின்றனர். பீமாராவ் ராம்ஜி என்பதை சுருக்கித்தான் ‘பீம்ஜி’ (beemji) என அவர் வைத்திருப்பதாகக் கூறுகின்றனர். ‘மெட்ராஸ்’ படத்திலேயே போலீஸ் ஸ்டேஷனில் அம்பேத்கர் வைத்திருப்பதாக பா.இரஞ்சித் காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 
அடுத்த கட்டுரையில்