'பேட்ட' ரிலீஸ் ஆன தியேட்டரில் திருமணம் செய்த ரஜினி ரசிகர்

Webdunia
வியாழன், 10 ஜனவரி 2019 (08:09 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் இன்று அதிகாலை உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது. முதல் காட்சி முடிந்துள்ள நிலையில் படம் பார்த்தவர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டரில் 'பேட்ட' படம் பார்க்க வந்த ரஜினி ரசிகரான அன்பரசு என்பவர் தனது காதலி காமாட்சியை படம் முடிந்தவுடன் தியேட்டரிலேயே திருமணம் செய்து கொண்டார். அவருடைய திருமணத்தை ரஜினி ரசிகர்கள் நடத்தி வைத்ததோடு, சீர்வரிசையையும் பரிசாக அளித்தனர்.

இந்த திருமணம் குறித்து அன்பரசு கூறியபோது, 'நாங்கள் மூன்று ஆண்டுகளாக காதலித்து வருகிறோம். இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு எங்களிடம் வசதி இல்லை. இதனையறிந்த ரஜினி மன்ற நிர்வாகிகள் எங்களுக்கு 'பேட்ட' ரிலீஸ் தினத்தில் தியேட்டரிலேயே திருமணம் செய்து வைத்தனர் என்று கூறினார். இதேபோல் சேலத்திலும் ஒரு காதல் ஜோடி 'பேட்ட' ரிலீசான தியேட்டரில் திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்