கிரிக்கெட் கமெண்ட்ரியில் இனப் பாகுபாடு பார்க்கிறேனா? ஆர் ஜே பாலாஜி விளக்கம்!

Webdunia
திங்கள், 9 நவம்பர் 2020 (11:35 IST)
கிரிக்கெட் தமிழ் வர்ணனையில் ஆர் ஜே பாலாஜியின் இனப்பாகுபாடு பேச்சு பற்றி எழுந்த விமர்சனத்துக்கு பதிலளித்துள்ளார்.

வானொலியில் ஆர் ஜே வாக இருந்த ஆர் ஜே பாலாஜி தன் திறமையால் சினிமாவுக்குள் நுழைந்து இப்போது ஒரு முன்னணி நகைச்சுவை நடிகராகவும் இயக்குனராகவும் இருக்கிறார். இந்நிலையில் அவர் ஸ்டார் ஸ்போட்ஸ் தமிழில் கிரிக்கெட் வரண்னையும் செய்து வருகிறார். இப்போது ஐபிஎல் போட்டிகள் நடந்து வரும் நிலையில் அவரின் வர்ணனை மிகவும் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

கிரிக்கெட் பற்றி எதுவுமே தெரியாமல் பரீட்சைக் கேள்விக்கு பதில் தெரியாத மாணவன் என்னவென்னமோ எல்லாம் உளறி தேர்வுத்தாளை நிரப்புவது போல வாய்க்கு வந்ததை எல்லாம் உளறுவதாக ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் தமிழில் வர்ணனை செய்பவர்கள் எல்லாருமே ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்களாகவே இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும அவர் சில வீரர்களைப் பட்டப்பெயர் வைத்து பேசுவதாகவும் இனப் பாகுபாட்டோடு அனுகுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதுபற்றி சமீபத்தில் அளித்த நேர்காணலில் அவர் பதிலளித்துள்ளார். அதில் ‘நான் என் வேலையை ரசித்து செய்கிறேன். நான் ஏதாவது தவறாக பேசியிருந்தால் நான் வேலை செய்யும் நிறுவனம் என்னைத் தூக்கி இருக்கும். என் கமெண்ட்ரியை 90 சதவீதம் பேர் ரசிக்கின்றனர். 10 சதவீதம் பேர் விமர்சனம் செய்கின்றனர். நான் 90 சதவீதம் பேரை திருப்தி படுத்த முயல்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்