அடிச்சு துவம்சம் பண்ணிடுவேன் – வனிதா திருமண விஷயத்தில் கொந்தளிக்கும் தயாரிப்பாளர்!

Webdunia
சனி, 11 ஜூலை 2020 (18:35 IST)
நடிகை வனிதா விஜயகுமார் மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டது தொடர்பாக பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரன் வெளியிட்ட வீடியோ சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லாத நடிகையான வனிதா விஜயகுமார் சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொனடது சமூகவலைதளங்களில் கவனத்தை ஈர்த்தது. ஆனால் இது சம்மந்தமாக பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் அதிரடியாக பேட்டி அளித்து இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து வனிதா மற்றும் பீட்டர் பால் இருவரையும் கண்டிக்கும் விதமாக பலரும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அதில் பிரபல தயாரிப்பாளரான ரவீந்தரனும் ஒருவர். அவர் வெளியிட்ட வீடியோவுக்கு வனிதாவும் கோபமாக பதிலளித்து இருந்தார். இந்நிலையில் இப்போது வனிதா திருமணம் குறித்து தான் ஏன் பேசினேன் என்று ரவீந்தரன் பதிலளித்துள்ளார். அதில் ‘நான் பீட்டர் பாலின் மனைவி பாதிக்கப்பட்டுள்ளார் என்பதால் அவருக்கு ஆதரவாக பேசினேன். அதில் ஒன்றும் தவறு இல்லை. நான் ஒண்ணும் தனிமனித விமர்சனம் வைக்கவில்லை. விவாகரத்து வாங்காத பீட்டர் பாலுடன் வனிதா வாழ்வதே சட்டத்திற்கு எதிரான விஷயம். என்னைப் பற்றி பேசினா அமைதியா போறதுக்கு நான் ஒன்னும் பீட்டர் இல்லை. எங்க வீட்டுல இந்த மாதிரி ஒரு ஆள் இருந்தால் அடிச்சு துவம்சம் பண்ணிடுவேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்