பகையை மறந்து தன் படத்தில் கௌதம் மேனனை நடிக்க வைக்கும் தயாரிப்பாளர்… பின்னணி என்ன?

Webdunia
திங்கள், 26 ஏப்ரல் 2021 (17:35 IST)
எல்ரெட் குமார் தயாரிக்கும் விடுதலை படத்தில் கௌதம் மேனன் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

கௌதம் மேனனை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர் படம் முடிவதற்குள் அவருக்கு எதிரியாகிவிடுவார். அந்த அளவுக்கு கௌதம் மேனன் பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தி விடுவார். அந்த வகையில் நீதானே என் பொன்வசந்தம் படத்துக்கு ரஹ்மான்தான் இசையமைப்பாளர் என சொல்லி தயாரிப்பாளர் எல்ரெட் குமாரிடம் பணம்பெற்றார் கௌதம் மேனன். ஆனால் அந்த படத்துக்கு கடைசியில் இசையமைத்தவர் இளையராஜா.

இதனால் ஆத்திரம் அடைந்த தயாரிப்பாளர் குமார் கௌதம் மேல் வழக்கு தொடுக்கும் அளவுக்கு சென்றார். அந்த அளவுக்கு எலியும் பூனையுமாக இருந்த இருவரும் இப்போது ஒரே படத்தில் பணியாற்றி வருகின்றனர். அரசியலைப் போலதான் சினிமாவும் நிரந்தர எதிரி என்று யாரும் கிடையாது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்