வாத்தியாராக விஜய் சேதுபதி, நாயகனாக சூரி! – வெற்றிமாறனின் “விடுதலை” ஃபர்ஸ்ட் லுக்!

வியாழன், 22 ஏப்ரல் 2021 (12:12 IST)
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நாயகனாக நடித்துள்ள “விடுதலை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தனுஷுடனான அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம் “விடுதலை”. இந்த படத்தின் மூலமாக காமெடி நடிகர் சூரி முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். அதில் “வாத்தியாராக விஜய்சேதுபதி, கதா நாயகனாக சூரி” என்று குறிப்பிடப்பட்டுள்ளதுடன் கான்ஸ்டபில் கெட்டப்பில் சூரியும், கைதி கெட்டப்பில் விஜய் சேதுபதியும் உள்ளனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்