ரவி தேஜா படத்தில் கதாநாயகியாக நடிக்கும் பிரியங்கா மோகன்!

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2023 (14:09 IST)
டாக்டர் படத்தின் வெற்றியில் நடிகை பிரியங்கா மோகனின் துறுதுறுப்பான நடிப்பும் ஒரு முக்கியக் காரணம். அந்த படத்தில் அவரின் நடிப்பால் கவரப்பட்ட சிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்த படமான டான் படத்திலும் வாய்ப்புக் கொடுத்தார். அதே சூர்யாவின் எதற்கு துணிந்தவன் படத்திலும் நடித்தார்.

இப்போது தனுஷுடன் கேப்டன் மில்லர் மற்றும் ஜெயம் ரவியோடு பிரதர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அடுத்து நெல்சன் தயாரிப்பில் கவின் கதாநாயகனாக நடிக்கும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

இவைத்தவிர தற்போது தெலுங்கில் ரவிதேஜா நடிப்பில் கோபிசந்த் மலினேனி இயக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவைத் தவிர தெலுங்கில் நானியோடு சூர்யாவின் சனிக்கிழமை மற்றும் பவன் கல்யாணின் ஓஜி ஆகிய படங்களிலும் நடிக்கிறார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்