சமூகவலைதளங்களில் இருந்து விலகும் லோகேஷ் கனகராஜ்..!

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2023 (14:02 IST)
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக அமைந்த விஜய்யின் லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்த படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றாலும் விமர்சன ரீதியாக எதிர்மறை விமர்சனங்கள் அதிகமாக வந்தன. அதற்குக் காரணம் மிகவும் திராபையாக உருவாக்கப்பட்ட இரண்டாம் பாகம்தான். இந்நிலையில் அதை சமாளிக்க ரிலீஸூக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் படத்தில் சொல்லப்பட்ட பிளாஷ்பேக் பொய்யானது எனக் கூறிவருகிறார். ஆனால் அதையும் ரசிகர்கள் இப்போது கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் லோகேஷ் அடுத்த ஆறு மாதங்களுக்கு ரஜினி படத்தின் திரைக்கதைப் பணிகளில் ஈடுபட உள்ளதால் சமூகவலைதளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்