‘ராதே ஷ்யாம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (09:01 IST)
பிரபாஸ் நடித்த ராதேஷ்யாம் திரைப்படம் ஏற்கனவே ரிலீசுக்கு தயாராகி ஒரு சில ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டன என்பதும் அதன் பின்னர் சில காரணங்களால் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டன என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது ராதேஷ்யாம் படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படம் மார்ச் 11-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்
 
மார்ச் 11ஆம் தேதி ராதேஷ்யாம் படம் வெளியாக இருக்கும் நிலையில் மார்ச் 10ஆம் தேதி சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரிலீஸ் ஆவதால் இரண்டு திரைப்படங்களும் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
தமிழ்நாட்டில ராதேஷ்யாம் திரைப்படமும், தெலுங்கு மாநிலங்களில் எதற்கும் துணிந்தவன் திரைப்படமும் மோதுவதால் இருதரப்பு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்